
எத்தனை கோடி செலவு செய்தாலும் திமுக தோற்பது உறுதி-வைகோ
திமுக எத்தனை ஆயிரம் கோடியைச் செல்வு செய்தாலும் வெல்லப் போவது அதிமுக கூட்டணிதான் என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
நாகர்கோவில் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தி.மு.க., அரசு மீது எல்லா தரப்பு மக்களுக்கும் வெறுப்பு வளர்ந்து வருகிறது. விலைவாசி உயர்வு, மின்வெட்டு என மக்கள் [^] வெறுப்படைந்து போய் உள்ளனர். இதன் வெளிப்பாடாகதான் கோவை மற்றும் திருச்சி [^] அ.தி.மு.க., போராட்டத்தில் மக்கள் குவிந்தனர்.
முல்லைப்பெரியாறு பிரச்னையில் தி.மு.க.வின் நிலைப்பாடுதான் தமிழ்நாட்டுக்குரிய நியாயத்தை கிடைக்க விடாமல் செய்கிறது.
தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அணி வலுவாக உள்ளது. இந்த அணியில் மேலும் கட்சிகள் சேருமா? என்பது போன்ற யூகங்களுக்கு ஜெயலலிதாதான் பதிலளிக்க வேண்டும். ஆனால் தி.மு.க. எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்தாலும் அ.தி.மு.க., அணி வெற்றி பெறும் என்றார் வைகோ
Source:- Times of India வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 20, 2010, 10:57[IST]