Thursday, August 12, 2010

BJP to form alliance with caste parties in TN

தமிழகத்தில் கூட்டணி 'குருமா'-பாஜக முயற்சி!

தமிழகத்தில் தன்னை கூட்டணியில் சேர்க்க அதிமுக மறுத்து வருவதால் ஜாதிக் கட்சிகளை இழுத்து புதிதாக ஒரு மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.

சில சட்டமன்றத் தேர்தல்களில் திமுக, அதிமுக கூட்டணியில் இணைந்து சில தொகுதிகளில் வென்ற பாஜக பின்னர் இரு கட்சிகளாலும் கழற்றிவிடப்பட்டது. இதையடுத்து அதன் உண்மையான 'செல்வாக்கு' வெளியில் தெரிந்தது.

இந் நிலையில் சட்டமன்றத் தேர்தல் வருவதால் குறைந்தது 50 இடங்களிலாவது போட்டியிட்டு டெபாசிட்டைக் காப்பாற்ற வேண்டிய நிலையில் பாஜக உள்ளது.

திமுக-காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்புகள் தெடார்ந்த வண்ணம் இருக்கும் நிலையில், மறுபுறம் அதிமுக தனது தலைமையில் புதிய கட்சிகளை கூட்டணிக்குள் இழுக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந் நிலையில், தேசியக் கட்சியான பாஜக மட்டும் தனித்து விட்டப்பட்டது. விஜய்காந்தின் தேமுதிகவுடன் கூட்டணி சேர தீவிரமாக முயன்ற அந்தக் கட்சிக்கு தோல்வியே கிடைத்துள்ளது.

இதையடுத்து தமிழகத்தில் உள்ள ஜாதிக் கட்சி மற்றும் சிறிய கட்சிகளை எல்லாம் ஒரு அணியாக இணைத்து தேர்தலை சந்தித்த பாஜக முயற்சி மேற்கொண்டுள்ளது.

பாஜகவின் இந்த தேர்தல் தூண்டிலில் முதலில் மாட்டியுள்ளது அகில இந்திய கைவினைஞர்கள் முன்னேற்றக் கழகம் என்று கூறப்படுகிறது. அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் விசு. சிவக்குமார் பாஜக தலைவர்களிடம் சமீப காலமாக நெருக்கம் காட்டி வருகிறார்.

அதே போல பிற ஜாதிக் கட்சிகளுக்கும் பாஜக வலை வீசி வருகிறது.

தமிழக விரைவில் நடைபெற உள்ள பாஜக தலைவர் ஒருவரின் இல்ல விழாவில் தமிழகத்தில் உள்ள முக்கிய ஜாதி கட்சி தலைவர்களை காணலாம் என்கின்றார்கள்.

Source:- Thatstamil.oneindia.in வியாழக்கிழமை, ஆகஸ்ட் 12, 2010, 11:41[IST]

No comments:

Post a Comment