Thursday, August 5, 2010

tamilnadu politics admk mnmk

அதிமுக கூட்டணியில் இணைகிறது மனித நேய மக்கள் கட்

மனித நேய மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் இணையவுள்ளது. நேற்று இதுதொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

சட்டசபைத் தேர்தலுக்கான முஸ்தீபுகளில் அதிமுக தீவிரமாக இறங்கியுள்ளது. முதல் கட்டமாக கூட்டணியை விஸ்தரிக்கும் நடவடிக்கைகளில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இறங்கியுள்ளார்.

இதையடுத்து சமீபத்தில் புதிய தமிழகம் [^] கட்சி அதிமுககூட்டணிக்கு வந்து சேர்ந்தது. இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சந்தித்துப் பேசினார். அப்போது எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்தும் பேசப்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாஹ் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார்.

இதுகுறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு [^] முஸ்லீ்ம் முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், மனித நேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஜவாஹிருல்லாஹ், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயாலளர் ஹைதர் அலி, மனித நேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் சமது, தமுமுக பொருளாளர் ரஹமதுல்லாஹ், மனித நேயக் கட்சியின் பொருளாளர் ஹாரூண் ரஷீத் ஆகியோர் ஜெயலலிதாவை சந்தித்து அரசியல் நிலவரம் குறித்துப் பேசினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டணியில் இணைவது குறித்தும், எத்தனை இடங்கள் தரப்படும் என்பது குறித்தும் அதிமுகவுடன் மனித நேய மக்கள் கட்சி பேசியுள்ளதாக கருதப்படுகிறது.

ஏற்கனவே அதிமுக கூட்டணியில் மதிமுக, சிபிஐ, சிபிஎம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இது போக சில குட்டிக் கட்சிகளும் உள்ளன. இவற்றின் வரிசையில் புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி ஆகியவை இடம்பெறவுள்ளன.

Thatstamil.oneindia.in வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 6, 2010, 9:14[IST]

No comments:

Post a Comment