காங்கிரசுடன் கூட்டு வேண்டாம்-அதிமுக பாஜக 'அட்வைஸ்'!
சென்னை: காங்கிரசுடன் கூட்டணி அமைத்தால், அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் என்று பாஜக மாநிலத் துணைத் தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், முன்னாள் அமைச்சர் இளங்கோவன் திமுகவை கண்டபடி விமர்சிக்கிறார். இளங்கோவன் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து, முதல்வர் கருணாநிதி மனம் திறந்து அறிக்கை விட்ட பிறகும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் யாரும் முதல்வரை இதுவரை சந்தித்துப் பேசவில்லை.
ராகுல் காந்தி நான்கு முறை தமிழகம் வந்தார். ஒரு முறை கூட கருணாநிதியை சந்திக்கவில்லை. இதிலிருந்தே திமுக-காங்கிரஸ் கூட்டணி நீடிக்காது என்பது தெளிவாகிறது.
வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்தால், அதிமுகவின் வெற்றி வாய்ப்பு நிச்சயம் பாதிக்கப்படும்.
அதே போல காங்கிரஸ் கட்சியுடன் ராமதாஸ் கூட்டணி வைத்தால், தமிழ் சமுதாயத்திற்கு அவர் துரோகம் செய்தது போலாகி விடும் என்றார் ராஜா
Source:thatstamil.oneindia.in புதன்கிழமை, ஆகஸ்ட் 11, 2010, 13:11[IST]
No comments:
Post a Comment