Friday, August 13, 2010

trichy tomorrow jayalalitha





திருச்சியில், நாளை ஜெயலலிதா ஆர்ப்பாட்டம்

விலைவாசி உயர்வு, விவசாயிகள் பிரச்சினை, மீனவர் பிரச்சினை, மணல் கொள்ளை ஆகியவற்றை கண்டித்து திருச்சி பொன்மலை “ஜி” கார்னர் மைதானத்தில் நாளை மாலை 4 மணிக்கு ஜெயலலிதா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் வருகிறார்கள்.

வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்த திருச்சியில் காஜாமியான் பள்ளி, திருச்சி இரும்பு உருக்காலை உள்பட 10 இடங்களில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டு உள்ளது.

முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், ஜெயக்குமார் ஆகியோர் முகாமிட்டு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் தலைமை தாங்க ஜெயலலிதா தனி விமானம், நாளை மாலை 4 மணிக்கு திருச்சி விமான நிலையம் செல்கிறார். பிறகு, கார் மூலம் சுப்பிரமணியபுரம், டி.வி.எஸ்.டோல்கேட் வழியாக “ஜி”கார்னர் மைதானம் சென்று ஆர்ப்பாட்டத்தில்
பங்கேற்கின்றார்.

Source: MAALAI MALAR
சென்னை 13-08-2010 (வெள்ளிக்கிழமை)



தொண்டர்கள் வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்துகிறார்களா என்பதை கண்காணிக்க ஆங்காங்கே 2 பேர் கொண்ட அ.தி.மு.க. வக்கீல்கள் குழு அமைக்கப்பட்டு உள்ளது. வீடியோ மூலம் படம் எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment