திருப்பூர் எம்.எல்.ஏ. திமுகவில் சேர முடிவு!
திருப்பூர் எம்.எல்.ஏ., கோவிந்தசாமி திமுகவில் இணையவிருப்பதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்,'வரும் 25 ஆம் தேதி திமுகவில் இணையவிருக்கிறேன். 250 பேருந்துகளில் ஆதரவாளர்களுடன், சென்னையில் நடக்கும் விழாவில் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் கட்சியில் இணைவேன்' எனத் தெரிவித்தார்.
திருப்பூர் எம்.எல்.ஏ., வான கோவிந்தசாமி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர். துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா எடுக்கும் விஷயத்தில் இவருக்கும் கட்சித் தலைமைக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவரை மார்க்சிஸ்ட் கட்சித் தலைமை கட்சியில் இருந்து நீக்கியது.
அவர் திமுகவில் இணைவாரா என்ற கேள்வி எழுந்திருந்த நிலையில், அதை உறுதிப்படுத்தும் வகையில் இன்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
-சிவாஜி டிவி August 16, 2010 16:04:41
No comments:
Post a Comment