பாமக இல்லாமல் யாராலும் ஆட்சி அமைக்க முடியாது!: அன்புமணி
August 07, 2010 14:10:43
பாமக வின் துணை இல்லாமல் தமிழகத்தில் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது என்று பாமக இளைஞரணி தலைவரான அன்புமணி ராமதாஸ் கூறினார்.
சேலத்தில் இன்று நிருபர்களைச் சந்தித்த அவர் கூறுகையில்,
'பாமக வை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது. கடந்த 10 வருடத்தில், எங்கள் ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சியமைக்கவில்லை. எங்கள் கட்சிக்கு பலமில்லை என்கிறார்கள். எல்லாக் கட்சிகளையும் தனித் தனியாகப் போட்டியிடச் சொல்லுங்கள், நாங்களும் தனியாக நிற்கிறோம். யாருக்கு பலம் அதிகம் என்பது அப்போது தெரியும் என்றவர்
சாதிவாரி கணக்கெடுக்க 400 கோடி ரூபாய் செலவாகும் என்கிறார்கள். அதே வேலையை கிராம நிர்வாக அதிகாரிகளைக் கொண்டு செய்தால் 40 கோடி ரூபாய் தான் செலவாகும்.
தமிழக அரசின் ஆய்வுப்படி, தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்கள் பின்தங்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதில் 7 மாவட்டங்கள் வடமாவட்டங்கள். இதில் விழுப்புரம் மாவட்டத்தில் 73 சதவிகித மக்கள் குடிசைகளில் வாழ்கின்றனர். இதிலும் வன்னியர்கள் 46 சதவிகிகதம் பேரும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் 36 சதவிகிதம் பேர் குடிசைகளில் வாழ்கின்றனர். இதில் இருந்து வன்னியர்கள் பின்தங்கி இருப்பது தெரியும். அதனால்தான் 20 சதவிகித ஒதுக்கீடு கேட்டு, சமூக நீதி போராட்டத்தை நடத்தி வருகிறோம்.வன்னிய சமுதாயத்தினரை முன்னேற்றாமல் தமிழ்நாடு முன்னேறாது.
ஈழத் தமிழர்களுக்கு நல்லது நடக்கவேண்டுமானால், அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்த வேண்டும். சிறப்பு நிபுணர் குழு இலங்கைக்குச் செல்வதால் ஒரு பயனும் ஏற்படப்போவதில்லை.
காவிரியை வைகையோடு இணைப்பதாக் கூறிவரும் தமிழக அரசு அனைத்து நலன்களையும் தென் பகுதிகளுக்கே செய்கிறது. காவிரியை ஏன் பாலாற்றோடு இணைக்கக் கூடாது?' என்றவர்,
சேலத்தில் புதிய அரசு மருத்துவமனை வருவதற்கு நான்தான் காரணம். ஆனால் அதன் திறப்பு விழாவுக்கு அழைப்பிதழ் கூட தரவில்லை' என்று வருத்தப்பட்டார்.
-சிவாஜி டிவி
No comments:
Post a Comment