‘திமுக ஆட்சி காலியாயிடுச்சி’-டெல்லியில் சொல்கிறார்கள்!
திமுக ஆட்சி காலியாயிடுச்சி’ என்று டெல்லி வட்டாரத்தில் பேசப்படுவதாக அதிமுக தலைமை நிலையச் செயலாளர் செஙகோட்டையன் கூறினார்.
திருச்சியில் வரும் 14ம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் கண்டனக் கூட்டம் நடக்கவுள்ளது.
கூட்டம் நடைபெறவுள்ள ரயில்வே மைதானத்தில் இன்று அதிமுக பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம், தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் நிருபர்களை சந்தித்தனர்.
பன்னீர்செல்வம் கூறுகையில், அடுத்த ஆட்சி அதிமுக ஆட்சிதான் என்பதற்கு இந்த திருச்சி கண்டனக் கூட்டம் அச்சாரமாக அமையும். ஆட்சி முடியப்போகிற நேரத்தில் திமுகவின் அராஜகம் தலை தூக்குகிறது.
அதிமுகவின் எந்தவொரு பேனரிலும் ஆளுங்கட்சியை எதிர்த்து வாசகங்கள் இடம் பெறக்கூடாது என்று போலீசார் மிரட்டுகிறார்கள். அராஜகம் எப்படியெல்லாம் தலை தூக்கியிருக்கிறது பாருங்கள்.
திருச்சியில் 7 இடங்களில் பேனர் வைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த பிரம்மாண்ட மாநாட்டில் 10 லட்சம் அதிமுகவினர் கூடுகிறார்கள். ஜெ. பேரவை மற்றும் அதிமுக இளைஞரணியை சேர்ந்த 1,200 பேருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் மாநாட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றார்.
செங்கோட்டையன் கூறுகையில், திமுகவின் குடும்ப அரசியலை எதிர்த்து மக்கள் பிரச்சனைக்காக திருச்சியில் இந்த கண்டனக் கூட்டம் நடைபெறுகிறது.
கோவைமாநாட்டில் கழக பொதுச்செயலாளர் 1 மணி நேரம் பேசினார். அந்த ஒரு மணி நேர பேச்சுக்கு முதல்வர் கருணாநிதி 10 நாட்கள் விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார்.
ரயில்வே மைதானத்தில் மாநாடு நடத்துவதற்காக அனுமதி பெற டெல்லி சென்றிருந்தோம். அப்போது டெல்லி வட்டாரத்தில், ‘திமுக ஆட்சி காலியாயிடுச்சி’ என்று சொன்னார்கள்.
மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் நிறுத்த 5 மைதானங்களை தயார் செய்திருக்கிறோம் என்றார்.
Source:-Thatstamil.oneindia.in வியாழக்கிழமை, ஆகஸ்ட் 12, 2010, 12:28[IST]
No comments:
Post a Comment