கூட்டணி தொடர்பாக வாய் திறக்கக் கூடாது!: இளங்கோவனுக்கு தங்கபாலு எச்சரிக்கை
கலைஞர் வீட்டு வசதித் திட்டம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி., ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எழுப்பிய கேள்விக்கு தமிழக முதல்வர் கருணாநிதி அளித்திருந்த பதில் போதாது என்று, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவும் பதில் அளித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் இன்று நிருபர்களிடம் கூறுகையில் 'கூட்டணி குறித்து யாரும் கருத்து கூறக்கூடாது.தலைவி சோனியா எடுக்கும் முடிவுகளுக்கு மாறாக யாரும் நடக்க முடியாது' என்று அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:
தி.மு.க. பற்றி இளங்கோவன் விமர்சனம் செய்திருக்கிறாரே?
காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி வலிமையாக உள்ளது. வலிமையானது. யாராலும் பல வீனப்படுத்த முடியாது. இந்த கூட்டணியின் வலிமைக்கு கவசமாகவும், வலிக்கு நிவாரணமாகவும் இருப்போம்.
கூட்டணி தொடர்பாக யாரும் கருத்து தெரிவிக்க கூடாது. கட்சியின்பலம், பலவீனங்கள் குறித்து வெளிமேடைகளில் பேசக்கூடாது என்று ஏற்கனவே கூறி இருக்கிறேன். எல்லோரும் அவரவர்களுக்குரிய எல்லை தாண்டி பேசக்கூடாது. சோனியா எடுக்கும் முடிவுகளுக்கு மாறாகயாரும் நடக்க முடியாது.
இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
பொறுத்திருந்து பாருங்கள்.
அ.தி.மு.க.வுக்கு வலிமை சேர்ந்து வருவது போல் கூறப்படுகிறது. சிறுபான்மையினரும் சந்தித்து பேசி உள்ளார்களே. இது உங்களுக்கு பலவீனமாக அமையுமா?
மத்திய அரசு மூலமும், மாநில அரசு மூலமும் சிறுபான்மையினர் நிறைய சலுகைகள் பெற்றுள்ளார்கள். இதை அவர்களே அறிவார்கள். எனவே மாயையை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை
-சிவாஜி டிவி
No comments:
Post a Comment